இந்தியாவின் இரும்பு பெண்மனி தமிழக முதல்வர் ஜெ., மறைவு; லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

800x480_image61084146

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர் செல்வி ஜெயலலிதா. அவர் அரசியலுக்கு வந்த பின்னர் அவருடைய வாழ்க்கையில் நடந்தது என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் பன்னீர் செல்வம் மலர் அஞ்சலி செலுத்தினார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழக அரசின் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.அ.தி.மு.க., தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை பார்த்து  கண்ணீர் விட்டு கதறினர். மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா காலமான செய்தி வெளியானவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  இதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழக அரசு ஏழு நாட்கள் துக்கம் அணுசரித்துள்ளது. அரசு அலுவலகங்கள் அனைத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>