Published On: Mon, May 8th, 2017

உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட்

201606061122032971_how-to-make-potato-french-omelet_secvpf

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2

பெரியது

முட்டை – 3

பெரிய வெங்காயம்- 1

உப்பு – சுவைக்கு

மிளகுத்தூள் – 1 ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

* உருளைக்கிழங்கு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கிளறவும். உருளைக்கிழங்கு பாதி வெந்ததும் வெங்காயத்தை சேர்த்து கிளறவும். பின்னர் அதில் மிளகுத்தூள் சேர்க்கவும்.

* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

* உருளைக்கிழங்கு நன்கு பொரிந்ததும் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி உருளைக்கிழங்கின் மேல் நன்றாக பரத்தி விடவும்.

* பின் இதனை மூடி மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெந்ததும் திருப்பி போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் எடுத்து

பரிமாறவும்.

* உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட் ரெடி.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>