காஷ்மீரில் பிரதமர் மோடிக்கு வருகைக்கு எதிர்ப்பு!!

2017_2largeimg203_feb_2017_233236270

தெற்காசியாவின் மிக நீளமான சுரங்கப் பாதையான சேனானி- நஷ்ரி சுரங்கப்பாதையை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை (02.4.2017) காஷ்மீர் செல்கிறார். மோடியின் வருகைக்கு அங்குள்ள ஹூரியத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2011ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் 9.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் செல்வதற்கான தூரம் 42 கிலோ மீட்டரில் இருந்து 10 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் பனிச்சரிவு மற்றும் மணல் சரிவுகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், இனி சுரங்கப்பாதையின் வழியாக சிரமமற்ற பயணத்தை மக்கள் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் அப்பாவி இளைஞர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதை கண்டித்து ஹூரியத் அமைப்பு நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது. ”இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், அப்பாவி மக்கள் உயிர் போவதை கண்டு எங்களால் அமைதியாக இருக்க முடியாது” என ஹூரியத் அமைப்பினர் கூறியுள்ளனர். இதையடுத்து, காஷ்மீர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>