ஜெ., மரணம் தொடர்பான விவரம் அனைத்தையும் கொடுக்க தயார்: பிரதாப் ரெட்டி

800x480_image63417751

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் அனைத்து விவரங்களையும் அளிக்க தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பின. ஆனால் இவை மறுக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எந்த விவரத்தையும் விசாரணையின் போது வழங்க தயாராக உள்ளோம்.

விசாரணையை பொறுத்தவரை எங்களது நிலை திறந்த புத்தகமாகவே உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளோம். உடல்நிலை தேறிவந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட அந்த ஒரு நிமிடம் மட்டுமே பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அவரது உடல்நிலையில், எந்த பிரச்னையுமில்லை. அவர் தெளிவாக இருந்தார்.

ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>