தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது : ஓ. பன்னீர்செல்வம்

xd

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீது 4-வது நாளாக விவாதம் நடந்தது. விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினார்.அதற்குப் பதிலளித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. சுவாதி கொலை வழக்கு உள்பட பல வழக்குகளிலும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழக காவல்துறைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன. அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது” என்று பதிலளித்துள்ளார்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>