தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு…!

farmers-_stalinlong_1_10302

19 வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலான்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 19 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரை நிர்வானத்தில், எலிக்கறி சாப்பிட்டும், பாம்பு கறி சாப்பிட்டும் தினந்தோறும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் நூதன போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு வட மாநில விவசாயிகளும் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவை நேரில் சந்தித்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (01.04.2017) தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இறந்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. மத்திய அரசின் குழுவிடம் முறையாக அணுகி, தமிழக அரசு நிதி பெறாதது வேதனை அளிக்கிறது. தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டம் குறித்து மத்திய அரசும், மாநில அரசும் கவலையின்றி இருக்கின்றன. பயிர்க் காப்பீடு குறித்து மத்திய அரசும் மாநில அரசும் முரணான தகவல்களை வெளிப்படுத்துகின்றன.

போராட்டம் நடத்தும் விவசாயிகளை பிரதமர் மோடி நேரில் சந்திக்க வேண்டும். எனக்கு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுத்தால் நிச்சயம் சந்தித்து பேசுவேன்.

தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும். பிரதமர் மோடி விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். தமிழக முதல்வர் விவசாயிகளை நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற ஸ்டாலின் உடன், திருச்சி சிவா, டி.ராஜா ஆகியோர் சென்றிருந்தனர்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>