தினகரன் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு மிரட்டல்…

201704300706405653_hdupktfm-_l_styvpf

தினகரன் மீதான இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி பெயரை கூறி தன்னை மிரட்டியதாக பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

பெண் நீதிபதிக்கு போன்டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி தான் தீனகரன் மீதான வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் முதலில் கைதான சுகேஷ் சந்திரசேகர் மீதான புகாரை கடந்த ஏப்., 28 ம் தேதி நீதிபதி பூனம் சவுத்ரி விசாரிக்க இருந்தார். வழக்கு விசாரணைக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், தரை வழி போன் மூலம், நீதிபதி பூனம் சவுத்ரியை ஒருவர் அழைத்துள்ளார். ‘ நான் சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் சிறப்பு செயலாளர் அனுமந்த் பிரசாத் பேசுகிறேன். சுப்ரீம் கோர்ட் நீதிபதி உங்களுடன் பேச விரும்புகிறார். சுகேஷ் சந்திரசேகரை உடனே விடுவிக்க வேண்டும். இல்லாவிடில் உங்களுக்கு பணி ரீதியான சிக்கல்கள் ஏற்படும்.

சுப்ரீம் கோர்ட நீதிபதியின் போன் எண் 999****732 இது தான்.எதிர்காலத்தில் இந்த போன் எண்ணில், சுப்ரீம் கோர்ட் நீதிபதியுடன் பேசுங்கள்’ என, கூறியுள்ளார். சுகேஷ் சிறையில் அடைப்பு இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி பூனம் சவுத்ரி உடனடியாக போன் அழைப்பை துண்டித்தார். பின் வழக்கை விசாரித்து, சுகேஷ் சந்திரசேகரை மே மாதம், 12ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன் பின், சுப்ரீம் கோர்ட்டுக்கு தொடர்பு கொண்ட நீதிபதி பூனம் சவுத்ரி, சம்பந்தப்பட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதியுடன் நேரடியாகவே பேசினார்.

தனது அலுவலகத்தில் இருந்து யாரும் பேசவில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதி தெரிவித்தார். மேலும், அனுமந்த் பிரசாத் பெயரில் யாரும் தன் அலுவலகத்தில் பணியாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.இது குறித்து தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அளித்த புகாரின் பேரில், டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>