துப்பாக்கியால் சுட்டு தலைமைக் காவலர் தற்கொலை!

08-1425807381-gun345-600

தலைமைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்த் பால் என்ற டெல்லி போலீஸ் தலைமை காவலர் உச்சநீதிமன்றத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் நீதிமன்றத்தின் ஜி-கேட் பகுதியில் அவர் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தான் வைத்திருந்த ரைஃபிளை எடுத்த அவர் திடீரென தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். இதில் சந்த் பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 சொந்தப் பிரச்சனையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமைக் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>