நாளை தொடங்குகிறது ஐபிஎல் 2017 தொடக்க விழா….

1491288506-1044

நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடத்தப்படுகிறது.

இம்முறை தொடக்க விழாக்கள் 8 நகரங்களில் நடத்தப்படுகின்றன. நாளை ஹைதராபாத்தில் தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில், புனே நகரில் 6ம் தேதியும், ராஜ்கோட்டில் 7ம் தேதியும், இந்தூரிலும், பெங்களூரிலும் 8ம் தேதியிலும், மும்பையில் 9ம் தேதியும், கொல்கத்தாவில் 13ம் தேதியுமம், டெல்லியில் 15ம் தேதியும் தொடக்க விழாக்கள் நடைபெறுகின்றன.
இதுபோல தொடக்க விழாக்கள் நடைபெறுவதால் உள்ளூரில் பிரபலமான சினிமா ஸ்டார்கள் அதில் பங்கேற்பர். உள் மாநில கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்த முடியும். எனவே முதல் முறையாக 8 மைதானங்களில் தொடக்க விழா நடைபெற உள்ளது.
கடந்த வருடம் நடந்த 9வது ஐபிஎல் தொடரை 40 கோடி பேர் டிவியில் கண்டுகளித்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் இரு மடங்கு அதிகமாகும். எனவே இந்த வருடமும் டிவியில் அதிகம் பேர் கிரிக்கெட்டை கண்டுகளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>