பிரதமர் மோடி ஜெ., உடலுக்கு கண்ணீர் அஞ்சலி!

gallerye_14095999_1664121

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னைக்கு கிளம்பினார்.

டெல்லியில் கடும் பனிமூட்டமாக இருப்பதால் சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மோடி கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. மோடி நண்பகல் 12 மணிக்கு பிறகே சென்னை வந்தடைந்தார்.

ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலுக்கு மதியம் 01.30 மணிக்கு வந்தடைந்தார். அவருடன் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வெங்கையா நாயுடு ஆகியோர் வந்தனர்.

அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு மலர் வளையம் வைத்து கைகூப்பி கண்ணீருடன் மரியாதை செலுத்தினார்.

கண்ணீர் மல்க அவர் மரியாதை செலுத்தியது பொதுமக்களுக்கு மேலும் கவலையை அளித்தது.

சசிகலாவின் தலையை தடவி ஆறுதல் கூறினார். அதையடுத்து, தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தின் தோளில் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார். பொதுமக்களை பார்த்து கைகூப்பி வணக்கம் செலுத்தினார்.

இறுதியாக கிளம்பும்போது, கதறி அழுத தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தை கட்டி அணைத்து ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினார்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>