ரஜினி குடும்பத்துடன் ஜெ. உடலுக்கு அஞ்சலி

jayarajini_3099503f

மறைந்த ஜெயலலிதாவின் உடல் அஞ்சலிக்காக   ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா, மகள் சவுந்தர்யா, மருமகனும், நடிகருமான தனுஷ் ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது.

மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>