விஜய் டிவி ‘புகழ்’ மைனா நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை

ntlrg_20170404105519425599

சரவணன் மீனாட்சி டிவி தொடர் புகழ் நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில், ‘மைனா’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர், நந்தினி. இவர், ஜிம் ட்ரெய்னரான கார்த்திகேயனை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம்செய்துகொண்டார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்துவந்தனர்.

04-1491288762-nandini4545

கார்த்திகேயனுக்கும் நந்தினிக்கும் திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே கடந்துள்ள நிலையில், கார்த்திகேயனின் இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார்த்திகேயன், ஜிம் ட்ரெயினராக இருந்தவர். தற்கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

போலீஸார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>