விவசாயிகளின் வங்கிகடன் ரத்து; ஐகோர்ட் அதிரடி!

court_02

கூட்டுறவு வங்கி மூலம் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாள்களாக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் போராட்டம் நாளுக்கு நாள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்தனர்.

கடந்த 2016ல் 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

1405954896-2474

இதை எதிர்த்து தென்னிந்திய நதி நீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தாலும் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி  செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கானது மதுரை கிளையில் நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (04.04.2017) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களை, அதாவது 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்புக்கு அய்யாக்கண்ணு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் 4 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர். டெல்லி போராட்டக்களத்தில் 22 நாட்களாக உள்ள விவசாயிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அய்யாக்கண்ணுவைத் தூக்கி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் தேசிய வங்கிகளிலும் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>