Published On: Mon, May 8th, 2017

எதிர்பார்க்கும் மனசு …

zybap_162482

யாரும் தேடி வருவதில்லையென்றாலும்
யாரையேனும் எதிர்பார்க்கிறது மனசு …

காதுகள் பிளக்கும் தனிமையின்
பேரிரைச்சல்களுக்கு நடுவில்
கதவு தட்டப்படும் சத்தம்
உள்ளறைகளுக்கு எட்டாதுபோகுமோவென்று
குருவிசத்தமெழுப்புகிற அழைப்புமணி வாங்கி
மாட்டியாயிற்று வாசற்நிலைப்படியில் …

கிட்டிபுள்ளிலிருந்து கிரிக்கெட்டிற்கு மாறிவிட்டிருந்த
தெருவாச சிறுவர்கள் கூட விளையாட்டுக்காய்
அழுத்தவில்லை அழைப்புமணியை …

உச்சகட்ட உறக்கத்தை தொலைத்துவிட்டு
உள்ளறைகளில் உலவிக் கொண்டிருக்கையில்
யாரோ அழைப்பதைப் போன்றதோர் உணர்வு .
யாருமில்லையென்றறிந்து ஏமாந்து கொள்கிறேன்.
இனி என்ன செய்வது … ?

யாரும் தேடி வருவதில்லையென்றாலும்
யாரையேனும் எதிர்பார்க்கத் தான் செய்கிறது
மனசும் … உடம்பும் …

தர்மசம்வர்த்தினி

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>